மாவட்ட செய்திகள்

வலி நிவாரணி மாத்திரைகளை வாங்க முயன்ற 2 பேர் கைது + "||" + 2 arrested for trying to buy painkillers

வலி நிவாரணி மாத்திரைகளை வாங்க முயன்ற 2 பேர் கைது

வலி நிவாரணி மாத்திரைகளை வாங்க முயன்ற 2 பேர் கைது
வலி நிவாரணி மாத்திரைகளை வாங்க முயன்ற 2 பேர் கைது
கோவை

கோவையில் இளைஞர்கள் மத்தியில் போதை கலாசாரம் அதிகரித்து வருகிறது. இதற்காக அவர்கள் போதை ஸ்டாம்பு, போதை மாத்திரை மற்றும் போதை ஊசி போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் கோவையில் இளைஞர்கள் சிலர் கையில் போதை ஊசி செலுத்தி கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

 பின்னர் அந்த நபர்களை பிடித்து போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.
மேலும் போதை மாத்திரை விற்பனையை தடுக்க அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு போதை ஊசி விற்பனை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 இதனிடையே கடந்த வாரம் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்றதாக பெண் உள்பட 5 பேரை மாநகர போலீசார் கைது செய்தனர். மேலும் டாக்டரின் பரிந்துரை சீட்டு இன்றி யாருக்கும் மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என்று அனைத்து மெடிக்கல் உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள மருந்துக்கடையில் நேற்று முன்தினம் 2 பேர் மாத்திரை வாங்க வந்தனர். அவர்கள் கொடுத்த டாக்டரின் பரிந்துரை சீட்டை பார்த்த கடை உரிமையாளர் விஜய ரங்கனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

மேலும் அந்த வாலிபர்கள் கொடுத்த பரிந்துரை சீட்டில் நெஞ்சு எரிச்சலுக்கு பயன்படுத்த கூடிய ரேண்டக் மாத்திரைகள்-10, நிட்ரோஜம் என்ற தூக்க மாத்திரை -10 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த விஜயரங்கன், சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியை தொடர்பு கொண்டு டாக்டர், இதுபோன்ற பரிந்துரை சீட்டை கொடுத்து உள்ளாரா என்று கேட்டு உள்ளார்.

 அவர்கள் அவ்வாறு பரிந்துரை சீட்டு கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்து உள்ளார். இதையடுத்து அந்த வாலிபர்களிடம், கடைஉரிமையாளர் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது அவர்கள் கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் பெரியக்கடை வீதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அவர்கள் கோவை என்.எச். ரோட்டை சேர்ந்த முகமது ரசூல் (வயது 22), ராமநாதபுரத்தை சேர்ந்த சக்திவேல் (23) என்பதும், டாக்டரின் பரிந்துரை சீட்டை போலியாக தயாரித்து போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கியதும் தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். கைதான 2 வாலிபர்களும் போலீசில் அளித்த பகீர் வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நாங்கள் வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை வாங்கி அதனை கரைத்து போதைக்காக ஊசி மூலம் உடலில் செலுத்தி கொள்வோம். மேலும் இதுபோன்ற வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி எங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு விற்பனை செய்து வந்தோம். இதனிடையே டாக்டரின் பரிந்துரை சீட்டு இன்றி குறிப்பிட்ட மாத்திரைகளை மெடிக்கல் ஊழியர்கள் விற்பனை செய்துவது இல்லை.

இதன்காரணமாக நாங்களே டாக்டரின் பெயர்களில் போலியாக பரிந்துரை சீட்டு தயாரித்தோம். இதனைபயன்படுத்தி மெடிக்கலில் மாத்திரை வாங்க முயன்றோம். இதனை கண்டுபிடித்த மெடிக்கல் உரிமையாளர் போலீசாரிடம் கூறியதால் மாட்டிக்கொண்டோம் என்று தெரிவித்தனர். 

இதைத் தொடர்ந்து அவர்கள் இதுபோன்ற போலி பரிந்துரை சீட்டை பயன்படுத்தி எந்தெந்த மெடிக்கல்களில் மாத்திரைகள் வாங்கி உள்ளனர்? அதனை யார், யாருக்கு விற்பனை செய்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.