மாவட்ட செய்திகள்

போக்குவரத்து பெண் போலீஸ் ஏட்டு லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல் + "||" + Traffic female police officer bribed video viral

போக்குவரத்து பெண் போலீஸ் ஏட்டு லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்

போக்குவரத்து பெண் போலீஸ் ஏட்டு லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்
போக்குவரத்து பெண் போலீஸ் ஏட்டு லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்
கோவை

கோவை பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து பெண் போலீஸ் ஏட்டாக பணிபுரிபவர் பாப்பாத்தி. இவர் சம்பவத்தன்று பெரியகடை வீதி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட டி.கே.மார்க்கெட் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளார். அப்போது வாகன ஓட்டி ஒருவரிடம் லஞ்சம் பெற்றதாக தெரிகிறது.

இந்த காட்சியை அந்த பகுதியில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ வைரலானது பொதுமக்கள் இடையே வேகமாக பரவியது. சமூக வலைத்தளங்களில் பலர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்களது கருத்துகளை பதிவிட்டனர். 

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவரை ஆயுத படைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: -
போக்குவரத்து பெண் போலீஸ் ஏட்டு லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வீடியோ கடந்த 2 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அந்த பெண் போலீசிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பணம் கொடுத்ததாக வீடியோவில் பதிவான நபர், யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். 

மேலும் அவர் எதற்காக பணம் கொடுத்தார் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.தற்போது சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.