பொய் வழக்குகளால் அ.தி.மு.க.வினரை அசைக்க கூட முடியாது
பொய் வழக்குகளால் அ.தி.மு.க.வினரை அசைக்க கூட முடியாது என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.
திண்டுக்கல்:
தமிழகம் முழுவதும் நாளை (புதன்கிழமை) அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடக்கிறது. இதையொட்டி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், பொய் வழக்குகளை பதிவு செய்து அ.தி.மு.க.வினரை அசைத்து கூட பார்க்க முடியாது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை ஆலமரம் போன்று ஜெயலலிதா வளர்த்துள்ளார். அ.தி.மு.க. என்பது உண்மை விசுவாசிகளை கொண்ட இயக்கம். எனவே, ஜெயலலிதா வாக்கை உணர்த்தும் வகையில் இன்னும் 100 ஆண்டுகளுக்கு மக்களின் இயக்கமாக திகழும். நாளை நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும், என்றார்.
இந்த கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் கண்ணன், தேன்மொழி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. உதயகுமார், மாவட்ட பொருளாளர் வேணுகோபால், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் சுப்புரத்தினம், துணை செயலாளர் விஜயபாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயசீலன், யாகப்பன், ராமராசு, கொடைக்கானல் நகர செயலாளர் ஸ்ரீதர், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் யூசுப்அன்சாரி, அகரம் பேரூர் செயலாளர் சக்திவேல், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story