மாவட்ட செய்திகள்

கோழிப்பண்ணை நடத்தி மோசடி 4 பேருக்கு 3 ஆண்டு சிறை + "||" + Chicken farm fraud 3 years imprisonment for 4 persons

கோழிப்பண்ணை நடத்தி மோசடி 4 பேருக்கு 3 ஆண்டு சிறை

கோழிப்பண்ணை நடத்தி மோசடி 4 பேருக்கு 3 ஆண்டு சிறை
கோழிப்பண்ணை நடத்தி மோசடி 4 பேருக்கு 3 ஆண்டு சிறை
கோவை

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தீரன் பவுல்ட்ரி பார்ம்ஸ் என்ற நாட்டு கோழிப்பண்ணை இயங்கி வந்தது. இந்த பண்ணையை பெருந்துறை மடத்துப்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார், பூபதி, அபி என்ற அபிநயா, பி.எஸ்.குமார் ஆகிய 4 பேர்நடத்தி வந்தனர். 

இந்த நிலையில்  இந்த கோழிப்பண்ணை நிறுவனத்தில் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் ஒரு செட் அமைத்து தருவதுடன், கோழிதீவனம் மற்றும் மருந்துகளுடன் 900 நாட்டு கோழிக்குஞ்சுகளை தருவதாகவும், மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக ரூ.12 ஆயிரம் கொடுப்பதாகவும், வருட முடிவில் ஊக்கத்தொகையாக ரூ.16 ஆயிரம் கொடுப்பதாகவும் அறிவித்தனர்.

 இதேபோல் ரூ.1½ லட்சத்தை முதலீடு செய்தால் 700 நாட்டு கோழிக்குஞ்சுகளை வழங்கி, பராமரிப்பு தொகையாக மாதந்தோறும் ரூ.9 ஆயிரமும், வருட முடிவில் ஊக்கத்தொகையாக ரூ.12 ஆயிரமும் வழங்குவதாக தெரிவித்தனர்.

இந்த கவர்ச்சிகரமான அறிவிப்பை நம்பிய பலரும் இந்த கோழிப்பண்ணை நிறுவனத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். இந்த நிலையில் 14 வாடிக்கையாளர்களிடம் ரூ.33 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு திருப்பித்தராமல் மோசடி செய்து, ஏமாற்றி விட்டனர்.

 இதுகுறித்து திருப்பூர் காந்திநகரை சேர்ந்த அருண்பாலாஜி என்பவர், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். 
இதைத்தொடர்ந்து 4 பேர் மீதும் மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணை கோவை முதலீட்டாளர் பாதுகாப்பு கோர்ட்டில் (டேன்பிட்) விசாரணை நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட சதீஷ்குமார், பூபதி, அபிநயா, பி.எஸ். குமார் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜர் ஆகாததால் அவர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.