மாவட்ட செய்திகள்

அரசு பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி + "||" + Government bus collision kills auto driver

அரசு பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி

அரசு பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி
நிலக்கோட்டை அருகே அரசு பஸ் மோதி, ஆட்டோ டிரைவர் பலியானார்.
நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 42). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இரவு இவர், மைக்கேல்பாளையம் அருகே ஆட்சிபுரத்தில் உள்ள தனது மனைவி சண்முகவள்ளியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

நிலக்கோட்டை-செம்பட்டி சாலையில் மைக்கேல்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்கிய மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாய்ந்தது. இதில் செல்வராஜ் கீழே விழுந்தார்.

 அந்த சமயத்தில், எதிரே வந்த அரசு பஸ் செல்வராஜ் தலைமீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து சண்முகவள்ளி கொடுத்த புகாரின் பேரில், நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகுரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.