மாவட்ட செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்துவருவதால் வனப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது. + "||" + thali malai green

மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்துவருவதால் வனப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்துவருவதால் வனப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்துவருவதால் வனப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது.
தளி
மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்துவருவதால் வனப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலை
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஈட்டி, சந்தனம், வெள்வெல், வாகை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் அரியவகை தாவரங்கள் வளர்ந்துள்ளன. அது தவிர வனச்சரகங்களை வாழ்விடமாக கொண்டு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவற்றுக்குக்கான உணவு, இருப்பிடம் மற்றும் தண்ணீர் தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பூர்த்தி செய்து தருகின்றன.
ஆனால் கோடைகாலத்தில் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளில் நீர்வரத்து குறைந்து விடுவதுடன் அங்கு வளர்ந்துள்ள மரங்கள் புற்கள் செடிகள் உள்ளிட்டவை காய்ந்து விடுகின்றன. இதனால் வன விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது. அதைத்தொடர்ந்து வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அடிவாரப் பகுதிக்கு வந்து விடுகின்றன. அவற்றுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை கொடுத்து அமராவதி அணை அடைக்கலம் அளித்து வருகிறது.
பசுமையாக காடசி அளிக்கும் வனப்பகுதி
இந்த நிலையில் கடந்த15 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.அத்துடன் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளதுடன் இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.மேலும் வனப்பகுதியும் பசுமைக்கு திரும்பி உள்ளது. இதனால் வன விலங்குகளுக்கான உணவு மற்றும் தண்ணீர் தேவை பூர்த்தி அடைந்துள்ளது. இதனால் அடிவாரப் பகுதியில் முகாமிட்டுள்ள வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் திரும்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
ஆறுகளில் தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால் அமராவதி அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவில் நீடித்து வருகிறது.இதனால் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக பொதுப்பணித்துறையினர் 4-ம் நாளாக தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர்.
நேற்று காலை 6மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 88.32 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.அணைக்கு வினாடிக்கு 2260 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 2240 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.