மாவட்ட செய்திகள்

மடத்துக்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் குவியல் குவியலாக மண் கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. + "||" + madathukkulam road

மடத்துக்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் குவியல் குவியலாக மண் கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

மடத்துக்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் குவியல் குவியலாக மண் கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
மடத்துக்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் குவியல் குவியலாக மண் கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
போடிப்பட்டி
மடத்துக்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் குவியல் குவியலாக மண் கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
கனரக வாகனங்கள்
கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.பரபரப்பான இந்த சாலையில் மடத்துக்குளம் அருகே பல இடங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்காக ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் மண் குவியல் உள்ளது. இதனால் பல வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. எனவே இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் சாலையோரத்தில் வெள்ளைக் கோடுகள் வரையப்பட்டு தனி வழித்தடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மடத்துக்குளம் அருகே பல இடங்களில் மண் குவியல்உள்ளது.இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பான பயணம் கேள்விக் குறியாகியுள்ளது. வாகன ஓட்டிகள் அடிக்கடி இந்த மண் குவியலில் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் மண் குவியலால் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே இந்த மண் குவியல்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைநீர் வழித்தடங்கள்
இந்த பகுதியில் அதிக அளவில் கிரசர்கள் செயல்படுகின்றன. அங்கிருந்து வரும் கனரக வாகனங்களின் டயர்களில் ஒட்டிக்கொண்டு வரும் மண் மற்றும் வண்டியிலிருந்து சிதறும் ஜல்லிக்கற்கள் சாலையில் பரவுகிறது. இவ்வாறு தொடர்ச்சியாக அந்த நிறுவனங்களின் முன்பு மண் குவியல்கள் மற்றும் கற்கள் சிதறி விபத்துகளுக்கு காரணமாகிறது. எனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் மூலம் தினசரி சாலையில் மண் குவியல்கள் ஏற்படாதவாறு சுத்தம் செய்ய வேண்டும். அத்துடன் பல பகுதிகளில் நெடுஞ்சாலையோர மழைநீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளாலும் குப்பைகளாலும் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வழிந்தோடுவதற்கு வழியில்லாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன் மழைநீரால் அடித்து வரப்படும் மண் சாலைகளில் உள்ள பள்ளமான இடங்களில் குவியல் குவியலாக தேங்கி விடுகிறது. இதுவும் சாலையில் மண்குவியல்கள் ஏற்படுவதற்குக் காரணமாகும். எனவே நெடுஞ்சாலையோர மழைநீர் வடிகால்களை முழுமையாக தூர் வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் குவியலால் வழுக்கி விழும் வாகன ஓட்டிகள் கனரக வாகனங்களில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.