களைகள் முளைக்காமல் இருக்க வாழை சாகுபடியில் களைக்கொல்லி தெளிக்கப்படுகிறது.


களைகள் முளைக்காமல் இருக்க வாழை சாகுபடியில்  களைக்கொல்லி தெளிக்கப்படுகிறது.
x

களைகள் முளைக்காமல் இருக்க வாழை சாகுபடியில் களைக்கொல்லி தெளிக்கப்படுகிறது.

போடிப்பட்டி
களைகள் முளைக்காமல் இருக்க வாழை சாகுபடியில்  களைக்கொல்லி தெளிக்கப்படுகிறது.
எந்திரமயம்
பசுமைப்புரட்சிக்குப்பிறகான விவசாயம் என்பது, குறுகிய காலத்தில், குறைந்த செலவில் அதிக மகசூல் என்பதை நோக்கியே பயணிக்கிறது. இதனால் விதைப்பு முதல் அறுவடை முதலான விவசாயப் பணிகளில் பெருமளவு எந்திரமயமாகி வருகிறது. அத்துடன் களை எடுத்தல் போன்ற பணிகளுக்கு கூலி ஆட்கள் பற்றாக்குறையால் களைக்கொல்லிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இந்த களைக்கொல்லிகளால் நன்மை தரும் பூச்சியினங்கள் அழிவதாலேயே, கேடு தரும் பூச்சிகள் பயிர்களை அதிக அளவில் தாக்குவதற்குக் காரணம் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. மேலும் மண்வளம் பாதிக்கப்படுவதற்கு களைக்கொல்லிகளின் பயன்பாடு ஒரு காரணமாக இருக்கிறது. ஆனாலும் களைக்கொல்லிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தொழிலாளர் பற்றாக்குறை
தென்னந்தோப்புகள் தவிர்த்து பெரும்பாலான பயிர்களில் விதைப்புக்கு முன்பே களைக்கொல்லிகளைப் பயன்படுத்தி களைகளை அப்புறப்படுத்துகின்றனர். ஆனால் பயிர் நடவுக்குப் பிறகு களைக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் களைக்கொல்லிகள் தெளிப்பதில்லை.அதிக பரப்பளவில் வாழை சாகுபடி செய்துள்ள நிலையில் வாழைக் கன்றுகளுக்கு இடையில் முளைக்கும் களைகளை அகற்றுவதற்கு அதிகஎண்ணிக்கையிலான கூலித் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்டு விரைவாக களைகளை அழிக்க புதிய யுக்தியைப் பயன்படுத்துகின்றனர். வாழைக்கன்றுகளின் மீது களைக்கொல்லிகள் தெளிக்காத வகையில் தொழிலாளர்கள் குடை பிடித்து நிற்க, தெளிப்பான்கள் மூலம் களைக்கொல்லி தெளிக்கப்படுகிறது. வாழைக்கு குடை பிடிக்கும் இந்த செயல் சற்று சிரிப்பை வரவழைத்தாலும், கூலித்தொழிலாளர் பற்றாக்குறைக்கு புதிய தீர்வுகள் தேட வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்துவதாக உள்ளது.தற்போது வாழைக்கு குடை பிடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Next Story