கோட்டூர் அருகே நிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்


கோட்டூர் அருகே நிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
x
தினத்தந்தி 26 July 2021 9:36 PM IST (Updated: 26 July 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வரையிலும், மன்னார்குடியில் இருந்து சித்தமல்லி பகுதிக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருேக உள்ள புத்தகரத்தில் இருந்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வரையிலும், மன்னார்குடியில் இருந்து சித்தமல்லி பகுதிக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த 2 பஸ்களின் போக்குவரத்தும் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நகர பகுதிகளுக்கு செல்ல சிரமப்பட்டனர். 2 பஸ்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி 2 பஸ்களின் போக்குவரத்தையும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி சித்தமல்லியில் நடந்தது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மாரிமுத்து, அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றியக்குழுத்தலைவர் மணிமேகலைமுருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கும்பகோணம் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் நவமணி ஜெபராஜ், வணிக மேலாளர் ஸ்ரீதர், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் கார்த்திக், ஒன்றிய செயலாளர் பாலஞானவேல், ஊராட்சி தலைவர்கள் நொச்சியூர் இனியசேகரன், சித்தமல்லி சிவசங்கரிஜெயபால், கும்மட்டிதிடல் சிவஞானம், கூட்டுறவு வங்கி செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story