மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது


மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 July 2021 9:42 PM IST (Updated: 26 July 2021 9:42 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது

வீரபாண்டி,
திருப்பூர் கல்லாங்காடு கடைசி வீதியை சேர்ந்தவர் ரவி (வயது 37).  பனியன் நிறுவன தொழிலாளி. . இவர் நேற்று முன்தினம் மாலை தனது பனியன் நிறுவனத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பணிக்காக சென்றுள்ளார். பின்பு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது . இதுகுறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று பலவஞ்சிபாளையம் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தேனி மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த குபேந்திரன் (24) என்பதும், ரவியின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. பின்பு போலீசார் மோட்டார் சைக்கிளை ரவியிடம் ஒப்படைத்ததோடு குபேந்திரன் மீது வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Next Story