சங்கராபுரம் அருகே நோய் தாக்கிய நெற்பயிரை மாடுகளை மேயவிட்டு அழித்த விவசாயி


சங்கராபுரம் அருகே நோய் தாக்கிய நெற்பயிரை மாடுகளை மேயவிட்டு அழித்த விவசாயி
x
தினத்தந்தி 26 July 2021 4:48 PM GMT (Updated: 26 July 2021 4:48 PM GMT)

சங்கராபுரம் அருகே நோய் தாக்கிய நெற்பயிரை மாடுகளை மேயவிட்டு அழித்த விவசாயி


சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே மூக்கனூர் கிராமத்தை சார்ந்தவர் தங்கவேல் மகன் பழனி. விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 1½ ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்து வந்தார். ஆடி மாதம் கடைசியில் அறுவடை செய்ய இருந்த நிலையில் நோய் தாக்கியதால் கதிர் பிடிக்காமல் வளர்ந்துள்ளது. இதனால் மனமுடைந்த பழனி நோய் தாக்கிய நெற்பயிரை மாடுகளை மேய விட்டு அழித்தார்.  

இது குறித்து பழனி கூறும்போது, எனது நிலத்தில் கடந்த வைகாசி மாதம் நெற்பயிர் சாகுபடி செய்தேன். இதற்காக களைக்கொல்லி, உரம், தழை, எரு என சுமார் ரூ.30 ஆயிரம் செலவு செய்து உள்ளேன். ஆடி மாதம் கடைசியில் அறுவடை செய்யவேண்டிய நேரத்தில் நெற்பயிரில் நோய்தாக்கி கதிர் எதுவும் பிடிக்காமல் உள்ளது. இதனால் எனக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று நோய் தாக்கப்பட்டது இதுவே முதல் முறை. பயிர் அறுவடை செய்ய முடியாததால் மாடுகளை மே விட்டு அழித்து வருகிறேன் என்று வேதனையோடு கூறினார்.

Next Story