மாவட்ட செய்திகள்

வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டமோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு + "||" + Parked in front of the house Excitement as the motorcycle caught fire

வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டமோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டமோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள சு.பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் துரை மகன் அஜித்(வயது 23). இவர் நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்கச்சென்றார். 

பின்னர் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டின் முன்பு திடீரென தீயின் வெளிச்சம் தெரிந்ததை கண்டு சந்தேகம் அடைந்த அஜித் வெளியே வந்து பார்த்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியோடு மோட்டார் சைக்கிள்மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இருப்பினும் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. 

இதுபற்றிய தகவல்அறிந்து வந்த அரகண்டநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் தானாக தீப்பிடித்து எரிந்ததா? அல்லது யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்தனரா? என்பதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நள்ளிரவில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் சு.பில்ராம்பட்டு கிராமத்தில் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் இரு பிரிவாக ஆர்ப்பாட்டம் கறம்பக்குடியில் பரபரப்பு
கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் 2 பிரிவாக தனித்தனியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கறம்பக்குடி ஒன்றியக்குழு தலைவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா?
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கறம்பக்குடி ஒன்றியக் குழு தலைவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
3. விராலிமலை அருகே 8 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பரபரப்பு
விராலிமலை அருகே 8 பேருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4. வேலைவாய்ப்பு முகாம் திடீரென தள்ளி வைப்பு இளைஞர்கள் பெண்கள் சாலை மறியல் கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
கள்ளக்குறிச்சியில் நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாம் திடீரென தள்ளி வைக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
5. பள்ளியின் மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு
குறிஞ்சிப்பாடி அருகே பள்ளியின் மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்ததால் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.