குற்றங்களை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வேண்டுகோள்
குற்றங்களை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிக்கல்,
கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட புதுச்சேரி ஊராட்சியில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் மற்றும் பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமை தாங்கினார். நாகை டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
கிராமங்களில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் மாவட்ட காவல் துறையினரால் நியமிக்கப்பட்ட கிராம காவல் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். குற்றங்களை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
மேலும் பெண்கள் உதவி மையம் குறித்தும், பெண்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவிகள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை போலீஸ் உயர் அதிகாரிகளை எப்படி அணுகி தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களிடம், விளக்கி கூறினார்.
இதை தொடர்ந்து புதுச்சேரி கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்- இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார், ஊராட்சி தலைவர் கோமதி, பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story