வேலூர் அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
வேலூர்
வேலூரை அடுத்த ஊசூர் காட்டுப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 40). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். தனது பெற்றோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர்களை பார்க்க 3 நாட்கள் விடுமுறையில் கடந்த 23-ந் தேதி ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவரது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அரியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story