வருகிற 28-ந் தேதி தி.மு.க. அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் அ.தி.மு.க.கூட்டத்தில் தீர்மானம்
தி.மு.க. அரசுக்கு எதிராக 28-ந் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் நேற்றுகாலை நடந்தது. இதற்கு மாவட்ட அவைத் தலைவர் திருஞானசம்பந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் எம்.ஜி.எம்.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், தேர்தல் அறிக்கையில் கூறியபடி தி.மு.க. அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல் விலையை ரூ.5-ம், டீசல் விலையை ரூ.4-ம் குறைப்பதாகவும், கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவதாகவும் அறித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். பெண்கள், விவசாயிகளுக்கு அளித்த எண்ணற்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகஅரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தஞ்சை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகிய பகுதிகளில் தங்கள் வீடுகளின் முன்னே பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாவட்ட, ஒன்றிய, பகுதி கழக நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்-.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதி செயலாளர் அறிவுடைநம்பி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story