மாவட்ட செய்திகள்

ரத்த தானம் செய்த ராணுவ வீரர்கள் + "||" + Soldiers who donated blood

ரத்த தானம் செய்த ராணுவ வீரர்கள்

ரத்த தானம் செய்த ராணுவ வீரர்கள்
ரத்த தானம் செய்த ராணுவ வீரர்கள்
காரைக்குடி
கார்கில் போர் தினத்தையொட்டி காரைக்குடி 9-வது பட்டாலியன் என்.சி.சி. சார்பில் ராணுவ வீரர்கள் பங்கேற்ற ரத்த தான முகாம் நடைபெற்றது. விழாவிற்கு என்.சி.சி. கமாண்டிங் அதிகாரி ரஞ்சிஷ்பிரதாப் தலைமை தாங்கினார். முகாமை எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி, செந்தில்நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் காரைக்குடி அழகப்பா பள்ளிக்குழும தேசிய மாணவர் படை அதிகாரிகள், மூ.வி. அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த லூயிராஜ் மற்றும் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் வீரத்தை நினைவூட்டும் வகையில் அழகப்பா பள்ளி மாணவர்கள் ஓவியங்களை வரைந்தனர்.