மாவட்ட செய்திகள்

ஏரியில் மூழ்கி சிறுவன். சிறுமி பலி + "||" + boy and girl drowns in lake

ஏரியில் மூழ்கி சிறுவன். சிறுமி பலி

ஏரியில் மூழ்கி சிறுவன். சிறுமி பலி
அரக்கோணம் அருகே மீன்பிடித்தபோது சிறுவன். சிறுமி ஏரியில் மூழ்கி பலியானார்கள். ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டாள்.
அரக்கோணம்

அரக்கோணம் அருகே மீன்பிடித்தபோது சிறுவன் சிறுமி ஏரியில் மூழ்கி பலியானார்கள். ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டாள்.

ஏரியில் மீன்பிடிக்க சென்றனர்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பெருங்களத்தூர்  அருந்ததிபாளையத்தை சேர்ந்தவர் முருகையா, கூலி தொழிலாளி. 

இவருடைய மகள் சத்யா (வயது 10), மகன் கிஷோர் (9). அதேப்பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மகள் ஆனந்தி (10). சத்யா, கிஷோர், ஆனந்தி ஆகிய 3 பேரும் மற்றும் சிலரும் இன்று மாலை அங்குள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக கிஷோர், ஆனந்தி மற்றும் சத்யா ஆகிய 3 பேரும் ஏரியில் முழ்கியுள்ளனர்.  இதனை கண்ட கிராம மக்கள் உடனே ஏரியில் இருந்து 3 பேரையும் மீட்டனர். உயிருக்கு ஆபத்தானநிலையில் இருந்து அவர்கள் 3 பேரையும் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

சிறுவன் - சிறுமி பலி 

அங்கு டாக்டர்கள் அவர்களை பரிசோதனை செய்ததில் கிஷோர் மற்றும் ஆனந்தி வழியிலேயே இறந்துவிட்டது தெரியவந்தது. சத்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

 இது குறித்து அரக்கோணம் தாலூகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.