கணவர் சாவில் மர்மம்


கணவர் சாவில் மர்மம்
x
தினத்தந்தி 26 July 2021 11:13 PM IST (Updated: 26 July 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

கணவர் சாவில் மர்மம்-பெண் போலீசில் புகார்

கல்லல்
கல்லல் அருகே ஊகம்பட்டியை சேர்ந்தவர் தர்மலிங்கம்(வயது 65). இவரது மனைவி சிவகாமி. 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 30 வருடங்களாக சின்னதேவபட்டியில் உள்ள அக்கா பஞ்சவர்ணம் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இவர் திடீரென இறந்துவிட்டார். இந்த தகவலை தர்மலிங்கத்தின் மனைவி சிவகாமிக்கு பஞ்சவர்ணம் தெரிவித்திருந்தார். 
இதையடுத்து அங்கு வந்த சிவகாமி, கணவர் சாவில் மர்மம் இருப்பதாக கல்லல் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story