மாவட்ட செய்திகள்

மனு அளிக்க வந்த பெண்கள் கதறி அழுதனர் + "||" + women cry in collector office

மனு அளிக்க வந்த பெண்கள் கதறி அழுதனர்

மனு அளிக்க வந்த பெண்கள் கதறி அழுதனர்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பட்டா வழங்கக்கோரி மனு கொடுக்க வந்த பெண்கள் கதறி அழுதனர்.
திருவாரூர்;
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பட்டா வழங்கக்கோரி மனு கொடுக்க வந்த பெண்கள் கதறி அழுதனர். 
கதறி அழுதனர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்துக்கு உட்பட்ட கொற்கை ஊராட்சியை சேர்ந்த தலைக்காடு கிராமத்தில் வசித்து வரும் பெண்கள் நேற்று மனு அளிக்க திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் திடீரென கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அந்த பெண்கள் கூறியதாவது:-
திருத்துறைப்பூண்டி கொற்கை தலைக்காடு கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். 
மனைப்பட்டா
தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த எங்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் எங்களை தலைக்காடு ஏரி ஆக்கிரமிப்பில் வசித்து வருவதாக கூறி அதிகாரிகள் குடியிருக்கும் இடத்தை காலி செய்ய கூறுகிறார்கள்.  இதனால் நாங்கள் செய்வது அறியாமல் தவித்து வருகிறோம்.எனவே எங்களுக்கு குடிமனைப்பட்டா மற்றும் அரசு நிதி மற்றும் நலத்திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.