மாவட்ட செய்திகள்

வாணியம்பாடியில் இறந்த பெண்ணின் பெயரில் நில மோசடி + "||" + Land fraud in the name of the deceased woman

வாணியம்பாடியில் இறந்த பெண்ணின் பெயரில் நில மோசடி

வாணியம்பாடியில் இறந்த பெண்ணின் பெயரில் நில மோசடி
இறந்த பெண்ணின் பெயரில் நில மோசடி
வாணியம்பாடி

வாணியம்பாடி, நியூடவுன் ஜீவாநகர் பகுதியை சேர்ந்தவர் வஜ்ஜிரம் பிள்ளை. இவரது மகன் ஜெயராகவன். இவர் வாணியம்பாடி சார்பதிவாளர் உமாபதி மற்றும் டவுன் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 

எனது தாயார் டி.கே.பேபி கடந்த மே மாதம் 12-ந் தேதி இறந்துவிட்டார். இந்த நிலையில் எனது தாயார் பேபி பெயரில் வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி கிராமத்தில் 1.85 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த பட்டாநிலத்தை மர்மநபர்கள் சிலர், வேறொரு பெண்ணை எனது தாய் பேபி என்று கூறி ஆள்மாறாட்டம் செய்து கடந்த 20-ந் தேதி ஒருவருக்கு பொது அதிகார ஆவணம் (பவர்) செய்து கொடுத்துள்ளனர்.

வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பத்திரத்தை மையமாக வைத்து கடந்த 23-ந் தேதி பெண் ஒருவருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். இறந்து போன எனது தாயார் பேபியின் பெயரை பயன்படுத்தி, நிலமோசடி செய்துள்ளனர். 
இந்த மோசடி நபர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை ரத்துசெய்யவும், பத்திரம் தயாரித்த பத்திர எழுத்தர் மற்றும் உரிய அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியுள்ளார்.