மாவட்ட செய்திகள்

கார், மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 2 பேர் காயம் + "||" + Injury

கார், மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 2 பேர் காயம்

கார், மோட்டார் சைக்கிள் நேருக்கு  நேர் மோதி கொண்டதில் 2 பேர் காயம்
கார், மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
லாலாபேட்டை
லாலாபேட்டை அருகே உள்ள பிச்சம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவர் நேற்று மாலை பிச்சம்பட்டியில் இருந்து குளித்தலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள ஒரு கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று விட்டு கோவை நோக்கி ஒரு காரில் 5 பேர் வந்து கொண்டிருந்தனர். அந்த காரை கோவையை சேர்ந்த சத்யா (20) என்பவர் ஓட்டி வந்தார். லாலாபேட்டை மேம்பாலத்தில் வந்தபோது அந்த காரும், கார்த்திக் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கார்த்திக் மற்றும் காரில் பயணம் செய்த லட்சுமிநாராயணன் (54) ஆகியோர் காயம் அடைந்தனர். காரில் வந்த மற்ற 4 பேரும் எந்த காயமும் இல்லாமல் உயிர் தப்பினர். இதையடுத்து காயம் அடைந்த கார்த்திக் குளித்தலை அரசு மருத்துவமனைக்கும், லட்சுமிநாராயணன் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமயம் அருகே குலமங்கலம் ஜல்லிக்கட்டில் ஆர்ப்பரித்த காளைகள் 23 பேர் காயம்
திருமயம் அருகே குலமங்கலத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் ஆர்ப்பரித்த காளைகள் முட்டியதில் 23 பேர் காயமடைந்தனர்.
2. தெற்கு குடியிருப்பு கிராமத்தில் வடமாடு ஜல்லிக்கட்டு 3 வீரர்கள் காயம்
தெற்கு குடியிருப்பு கிராமத்தில் வடமாடு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 3 வீரர்கள் காயமடைந்தனர்.
3. கே.ராயபுரத்தில் மஞ்சுவிரட்டு: காளைகள் முட்டியதில் 20 பேர் காயம்
கே.ராயபுரத்தில் நடை பெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர்.
4. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது ஜல்லிக்கட்டு: ஆலங்குடி வன்னியன் விடுதியில் சீறிப்பாய்ந்த காளைகள் வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்; 66 பேர் காயம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது ஜல்லிக்கட்டு ஆலங்குடி வன்னியன் விடுதியில் நடந்தது. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். இதில் 66 பேர் காயமடைந்தனர்.
5. புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 44 பேர் காயம்
புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 44 பேர் காயமடைந்தனர்.