மனு கொடுக்கும் போராட்டம்


மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 27 July 2021 12:36 AM IST (Updated: 27 July 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

சி.ஐ.டி.யூ. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க  நரிப்பையூர், ராமேசுவரத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும், கிடாத்திருக்கை, கீழாம்பல், கீழப்பருத்தியூர், பனைக்குளம், உத்திர கோசமங்கை, பொட்டகவயல், பெருங்குளம், சிக்கல், சேரந்தை, உரத்தூர், கருமல், கரிசல்புளி, நல்லிருக்கை ஆகிய பகுதிகளில் உப்புநீரை குடிநீராக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. 
தற்போது இந்த திட்டங்களை மூடப்போவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மேற்கண்ட திட்டங்களினால் குடிநீர் பெற்றுவரும் பகுதிகளில் மிகப்பெரிய குடிநீர் பஞ்சம் ஏற்படும். மேலும், இந்த திட்டங்களில் பணியாற்றிவரும் ஏராளமான தொழிலா ளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
எனவே, மேற்கண்ட திட்டங்களை மூடக்கூடாது என்று வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் சி.ஐ.டி.யூ. குடிநீர் சங்கம் சார்பில் மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமை வகித்தார். இதில் கிடாத்திருக்கை, கீழாம்பால், லாந்தை, நல்லிருக்கை, உத்தரகோசமங்கை, எட்டிவயல், பனைக்குளம் ஆகிய ஊராட்சி தலைவர்கள் முன்னிலை வகித்தனர். 
சங்க மாவட்ட செயலாளர் மலைராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story