புலியூர் பஸ் நிலையம் அருகே பிணமாக கிடந்த வாலிபர் பிணம்


புலியூர் பஸ் நிலையம் அருகே பிணமாக கிடந்த வாலிபர் பிணம்
x
தினத்தந்தி 27 July 2021 12:37 AM IST (Updated: 27 July 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

புலியூர் பஸ் நிலையம் அருகே பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்
வாலிபர் பிணம்
கரூர் அருகே உள்ள புலியூர் பஸ் நிலையம் அருகே சுமார் 35 வயது வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். 
போலீசார் விசாரணை
விசாரணையில், அந்த வாலிபர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஓரிகோட்டையை சேர்ந்த அன்பு கண்ணன் (வயது 37) என்பது தெரிய வந்தது. இவர் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்துள்ளார்.  இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். 
மேலும் அன்புகண்ணன் எதற்காக புலியூர் வந்தார்? எப்படி இறந்தார்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story