குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 27 July 2021 12:49 AM IST (Updated: 27 July 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி அருகே வேலம்பாடி ஊராட்சியில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கரூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல் தலைமை தாங்கினார். வேலம்பாடி ஊராட்சி தலைவர் ராணிகணேசன் முன்னிலை வைத்தார். நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அவற்றை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பொதுமக்களுக்கு எடுத்து கூறப்பட்டது. மேலும் குழந்தைகளை பெற்றோர் எவ்வாறு பாதுகாப்பது வேண்டும் என்றும் விளக்கப்பட்டது. இதில் போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story