மாவட்ட செய்திகள்

வீடு புகுந்து தங்கச்சங்கிலி திருடிய வழக்கில் 2 வாலிபர்கள் கைது + "||" + Two youths arrested for stealing gold chains from house

வீடு புகுந்து தங்கச்சங்கிலி திருடிய வழக்கில் 2 வாலிபர்கள் கைது

வீடு புகுந்து தங்கச்சங்கிலி திருடிய வழக்கில் 2 வாலிபர்கள் கைது
வீடு புகுந்து தங்கச்சங்கிலி திருடிய வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் வசிப்பவர் ரெங்கராஜ். இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் தன்னுடைய 7½ பவுன் தங்கச் சங்கிலியை அடகு வைத்திருந்தார்.
அந்த தங்கச்சங்கிலியை கடந்த 2 வாரத்திற்கு முன்பு மீட்டு, பெரம்பலூரில் இருந்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்தார். இந்நிலையில் அவரை பின்தொடர்ந்து வந்த 2 பேர், தண்ணீர் கேட்பது போல் நடித்து ரெங்கராஜின் வீட்டிற்குள் புகுந்து தங்கச்சங்கிலியை திருடிச்சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தங்கச்சங்கிலியை திருடிச்சென்றது அரும்பாவூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 34), அவருடைய கூட்டாளியான திருச்சி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 42 பவுன் நகைகளுடன் வாலிபர் கைது
வாடிப்பட்டி அருகே 42 பவுன் நகைகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 2 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
3. பஸ்சில் திருடிய பெண் கைது
பஸ்சில் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
4. காரில் குட்கா பதுக்கியவர் கைது
காரில் குட்கா பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
5. மனைவியை தாக்கிய வாலிபர் கைது
விருதுநகர் அருகே மனைவியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.