மங்களமேடு பகுதியில் இன்று மின் நிறுத்தம்


மங்களமேடு பகுதியில் இன்று மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 27 July 2021 1:44 AM IST (Updated: 27 July 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

மங்களமேடு பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மங்களமேடு:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக ெலப்பைக்குடிக்காடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-
மங்களமேடு மற்றும் கழனிவாசல் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, சின்னாறு, பெருமத்தூர், குன்னம், வரகூர், பொன்னகரம், பரவாய், நன்னை, வேப்பூர், எழுமூர், கிளியூர், வைத்தியநாதபுரம், அயன்பேரையூர், வி.களத்தூர், டி.கீரனூர், திருமாந்துறை, லப்பைக்குடிக்காடு, சு.ஆடுதுறை, ஒகளூர், அந்தூர், கல்லம்புதூர், சின்னவெண்மணி, பெரியம்மாபாளையம், பிம்பலூர், பசும்பலூர் ஆகிய கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Next Story