மாவட்ட செய்திகள்

குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி + "||" + Mother kills child and attempts suicide

குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி

குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி
துறையூர் அருகே குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்றார்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த பச்சமலை புத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 23). இவரது மனைவி நிஷா (21). கார்த்திக் கடந்த ஆண்டு 26-ந் தேதி தீ விபத்தில் இறந்து விட்டார். இதனையடுத்து கிணத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் நிஷா தனது 1½ வயது குழந்தை இளவேனில் நிலவனுடன் வசித்து வந்தார். கணவரது நினைவு தினத்தையொட்டி நிஷா சோகமாக இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் தனது மகனை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தனது இடது கை மணிக்கட்டு பகுதியை நிஷா கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது கையில் இருந்து ரத்தம் கொட்டியது. அந்த சமயத்தில் வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீடு திரும்பினர். மகளின் நிலையை கண்டு பதற்றம் அடைந்த அவர்கள் நிஷாவை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் உஷா மீது கொலை மற்றும் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். கணவரின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது நினைவு நாளில் உஷா இந்த துயர முடிவை தேடிக் கொண்டதாக கூறப்படுகிறது.