மாவட்ட செய்திகள்

பரமத்திவேலூர் ‌அருகே காவிரி ஆற்றில் மிதந்த முதியவர் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை + "||" + old man body in river

பரமத்திவேலூர் ‌அருகே காவிரி ஆற்றில் மிதந்த முதியவர் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை

பரமத்திவேலூர் ‌அருகே காவிரி ஆற்றில் மிதந்த முதியவர் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை
பரமத்திவேலூர் ‌அருகே காவிரி ஆற்றில் மிதந்த முதியவர் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை.
பரமத்திவேலூர்,

பரமத்திவேலூர் அருகே உள்ள ‌அனிச்சம்பாளையம்‌ காவிரி ஆற்றில் நேற்று மாலை 60 வயது‌ மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் உடல் மிதப்பதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த ‌முதியவர் வெள்ளை நிற சட்டையும், கோடு போட்ட டிராயரும், சிவப்பு நிற அரைஞான்‌ கயிரும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
========