மாவட்ட செய்திகள்

கோவையில் மேலும் 164 பேருக்கு கொரோனா + "||" + Corona for another 164 people in Coimbatore

கோவையில் மேலும் 164 பேருக்கு கொரோனா

கோவையில் மேலும் 164 பேருக்கு கொரோனா
கோவையில் மேலும் 164 பேருக்கு கொரோனா
கோவை

கோவை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்தது. ஆனால் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அந்தவகையில் நேற்று மாவட்டத்தில் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 28 ஆயிரத்து 334 ஆக உயர்ந்தது. நேற்று ஒரேநாளில் 266 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி 2 லட்சத்து 24 ஆயிரத்து 144 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 

கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 58 வயது ஆண் மற்றும் 70, 75, 76 வயதுடைய முதியவர்கள் என மொத்தம் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.