நீண்ட வரிசையில் நின்று கோரிக்கை மனுக்களை அளித்த பொதுமக்கள்


நீண்ட வரிசையில் நின்று கோரிக்கை மனுக்களை அளித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 26 July 2021 10:51 PM GMT (Updated: 26 July 2021 10:51 PM GMT)

நீண்ட வரிசையில் நின்று கோரிக்கை மனுக்களை அளித்த பொதுமக்கள்

திருவண்ணாமலை

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று நடைபெறும் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கும் வகையில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் மனு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. 

கடந்த சில வாரங்களாக கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் பலர் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க நேரில் வருகின்றனர். கொரோனா காலம் என்பதால் அதிகாரிகள் பெரும்பாலும் பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க வந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்க காத்திருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெட்டியில் செலுத்த வலியுறுத்தினர். பெட்டியில் மனுக்களை செலுத்துவதால் நடவடிக்கைகள் இல்லை, எனவே அதிகாரிகள் தான் மனு வாங்க வேண்டும் என்றனர். இதையடுத்து சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். 

கோரிக்கை மனுக்கள் அளிக்க பொதுமக்கள் பலர் வந்ததால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story