மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல் வங்கி பெண் அதிகாரி பலி நண்பர் படுகாயம் + "||" + Motorcycle collision bank wall wall female officer kills friend

தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல் வங்கி பெண் அதிகாரி பலி நண்பர் படுகாயம்

தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல் வங்கி பெண் அதிகாரி பலி நண்பர் படுகாயம்
கானத்தூர் அருகே சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வங்கி பெண் அதிகாரி பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
ஆலந்தூர்,

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் நிவேதா (வயது 24). இவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நிவேதா, தனது கல்லூரி நண்பரான ஜேக்கப் தாமஸ் (26) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரம் சென்றுவிட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார்.


கானத்தூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.

உயிரிழந்தார்

இதில் நிவேதா, ஜேக்கப் தாமஸ் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நிவேதா பரிதாபமாக இறந்தார். அவரது நண்பரான ஜேக்கப்தாமஸ், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆற்றில் மூழ்கி மாணவி உள்பட 3 பெண்கள் பலி
குளித்துவிட்டு கரையேறியபோது ஆற்றில் மூழ்கி மாணவி உள்பட 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
2. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி கிளீனர் பலி
ஈஞ்சம்பாக்கத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி கிளீனர் பலியானார். டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
3. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி கிளீனர் பலி
ஈஞ்சம்பாக்கத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி கிளீனர் பலியானார். டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
4. ஈரோடு அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாடு பலி
ஈரோடு அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாடு பலியான சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
5. பனி மூட்டம் காரணமாக விபத்து கார்-வேன் மோதல்; 3 பேர் சாவு
உத்திரமேரூர் அருகே பனி மூட்டம் காரணமாக கார்-வேன் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.