மாவட்ட செய்திகள்

நாகூர் அருகே ஆற்றங்கரையில் முதியவர் பிணம் - யார் அவர்? போலீசார் விசாரணை + "||" + The body of an old man on the river bank near Nagore - who is he? Police investigation

நாகூர் அருகே ஆற்றங்கரையில் முதியவர் பிணம் - யார் அவர்? போலீசார் விசாரணை

நாகூர் அருகே ஆற்றங்கரையில் முதியவர் பிணம் - யார் அவர்? போலீசார் விசாரணை
நாகூர் அருகே ஆற்றங்கரையில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம் மீட்கப்பட்டது. இதுகுறித்து யார் அவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர்,

நாகூரை அடுத்த பூதங்குடி சாலை அருகில் உள்ள ஆற்றங்கரையில் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் பிணம் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த முதியவர் மஞ்சள், கருப்பு நிற கட்டம் போட்ட டி-சர்ட் அணிந்துருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த முதியவர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.