மாவட்ட செய்திகள்

பழமையான போலீஸ் குடியிருப்பு இடித்து அகற்றம் + "||" + Demolition of old police residence

பழமையான போலீஸ் குடியிருப்பு இடித்து அகற்றம்

பழமையான போலீஸ் குடியிருப்பு இடித்து அகற்றம்
திண்டுக்கல்லில், பழமையான போலீஸ் குடியிருப்பு இடித்து அகற்றப்படுகிறது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் ரவுண்டுரோடு, சீலப்பாடி ஆயுதப்படை மைதானம் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் குடியிருப்புகள் உள்ளன. இதில் ரவுண்டுரோடு போலீஸ் குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தன. 

அதில் பல வீடுகள் இடிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதையடுத்து பழைய வீடுகளில் வசித்த போலீசார், அடுக்குமாடி குடியிருப்புக்கு மாறினர்.

அதேநேரம் 10-க்கும் மேற்பட்ட பழமையான வீடுகள் அங்கு இருந்தன. அந்த வீடுகளின் கூரை ஓடுகளால் ஆனவை. இதனால் மேற்கூரை சேதம் அடைந்து இருந்ததால் மழைக்காலத்தில் ஒழுகின. இதன் காரணமாக அந்த வீடுகளில் யாரும் வசிக்கவில்லை. 

எனினும் நீண்ட காலமாக அந்த வீடுகள் இடிக்கப்படாமல் இருந்தன. இந்த நிலையில் அந்த வீடுகளை இடித்து அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.