மாவட்ட செய்திகள்

தனியார்மயத்தை கண்டித்து ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + Railway unions protest against privatization

தனியார்மயத்தை கண்டித்து ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தனியார்மயத்தை கண்டித்து ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் ரெயில்வே துறை மற்றும் ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை தனியார் மயமாக்குவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. ரெயில்வே தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறை, 

ஆர்ப்பாட்டத்துக்கு மயிலாடுதுறை கிளை செயலாளர் வீரமணி தலைமை தாங்கினார். கும்பகோணம் கிளை செயலாளர் தயாநிதி, தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை கிளை செயலாளர் செல்வம் வரவேற்றார். 

இதில் திருச்சி கோட்ட தலைவர் மணிவண்ணன் கலந்துகொண்டு பேசினார். இதில் பெகாசஸ் மென்பொருள் மூலம் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதை கண்டித்தும், தனியார்மயத்தை கண்டித்தும்் கோஷங்கள் எழுப்பப்படடன. இதில் நிர்வாகிகள் சாகுல்அமீது, ரகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.