பெரியகுளத்தில் கொரோனா அரக்கன் வேடமிட்டு விழிப்புணர்வு முககவசம் அணியாதவர்கள் அலறியடித்து ஓட்டம்


பெரியகுளத்தில் கொரோனா அரக்கன் வேடமிட்டு விழிப்புணர்வு முககவசம் அணியாதவர்கள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 27 July 2021 7:32 PM IST (Updated: 27 July 2021 7:32 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் கொரோனா அரக்கன் வேடமிட்டு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. அப்போது முககவசம் அணியாதவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பெரியகுளம்:
பெரியகுளம் நகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று பெரியகுளம் தென்கரை பகுதி தெருக்களில் நூதன முறையில், கொரோனா அரக்கன் போல் ஒருவர் வேடமிட்டு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. அப்போது தெருக்களில் முககவசம் அணியாமல் நடந்து வந்தவர்களை கொரோனா அரக்கன் வேடமிட்டவர் பிடிப்பதுபோல் சென்றதால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் முககவசம் அணியாதவர்களுக்கு நகராட்சி சார்பில் இலவசமாக முககவசம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். இதில்சுகாதார ஆய்வாளர்கள் அசன் முகமது, அலெக்சாண்டர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story