மாவட்ட செய்திகள்

மின் வயரில் தொங்கும் வவ்வால்களால் மின்தடை + "||" + Insulation by bats hanging on the power wire

மின் வயரில் தொங்கும் வவ்வால்களால் மின்தடை

மின் வயரில் தொங்கும் வவ்வால்களால் மின்தடை
பெரும்பாறை பகுதியில் மின்வயரில் தொங்கும் வவ்வால்களால் மின்தடை ஏற்பட்டுள்ளது
.பெரும்பாறை:

பெரும்பாறை மலைப்பகுதியில் அத்திப்பழ சீசன் தொடங்கியுள்ளது. இந்த பழங்களை தின்பதற்காக இரவு நேரத்தில் வவ்வால்கள் படையெடுத்த வண்ணம் உள்ளன. இதில் சில வவ்வால்கள் மின் வயரில் சிக்கி இறந்து தொங்குகின்றன. 

இதனால் பெரும்பாறை, புதூர், குத்துக்காடு, எம்.ஜி.ஆர். நகர், தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, பட்டலங்காடு பிரிவு, கானல்காடு, தடியன்குடிசை, கே.சி.பட்டி, குப்பம்மாள்பட்டி, பெரியூர், பாச்சலூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.

இதனால் கடந்த 3 நாட்களாக மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கின. நேற்று வரை மின்சார வினியோகம் செய்யப்படவில்லை. எனவே இறந்த நிலையில் மின் கம்பிகளில் தொங்கி கொண்டிருக்கும் வவ்வால்களை அகற்றி விட்டு சீரான மின் வினியோகம் செய்ய வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.