செங்கத்தில் பெண் போலி டாக்டர் கைது


செங்கத்தில் பெண் போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 27 July 2021 9:42 PM IST (Updated: 27 July 2021 9:42 PM IST)
t-max-icont-min-icon

செங்கம் நகரில் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த பெண் போலி டாக்டர் நேற்று கைது செய்யப்பட்டார்.

செங்கம்

போலி டாக்டர்

செங்கம் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் சோதனையின் போது தப்பிச் சென்ற பெண் போலி டாக்டர் மீண்டும் மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு புகார் வந்தன.

இந்த நிலையில் செங்கம் மருத்துவ அலுவலர் அருளானந்தம், செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று மருத்துவ படிப்பு படிக்காமல் வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்த ரேணுகா (வயது 50) என்பவரை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். 

கைது

விசாரணைக்கு பிறகு செங்கம் மருத்துவ அலுவலர் அருளானந்தம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேணுகாவை கைது செய்தனர். 

மேலும் செங்கம் நகரில் முக்கிய இடங்களில் முறையான மருத்துவப் படிப்பு படிக்காமல் மருத்துவம் பார்த்து வரும் போலி டாக்டர்களை பிடிக்க சுகாதாரத்துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Next Story