ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம்
x
தினத்தந்தி 27 July 2021 10:06 PM IST (Updated: 27 July 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம்

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9 தனிப்பிரிவு போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 
அதன் விவரம் வருமாறு:-

ரத்தினகிரி தனிப்பிரிவு ஏட்டு வினோத்குமார் ராணிப்பேட்டை தனிப்பிரிவு ஏட்டாகவும், ராணிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் குமரேசன் சிப்காட் தனிப்பிரிவு போலீசாகவும், ஆற்காடு டவுன் தனிப்பிரிவு ஏட்டு சுப்பிரமணி ஆற்காடு தாலுகா தனிப்பிரிவு ஏட்டாகவும், அங்கு பணியாற்றி வந்த விநாயகமூர்த்தி ஆற்காடு டவுன் தனிப்பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

ராணிப்பேட்டை தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாபு ரத்தினகிரி தனிப்பிரிவுக்கும், திமிரி தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி கலவை தனிப்பிரிவுக்கும், கலவை ஏட்டு ரகுராமன் வாழைப்பந்தல் தனிப்பிரிவு ஏட்டாகவும், அரக்கோணம் தாலுகா தனிப்பிரிவு போலீஸ் சிவகுமார் அரக்கோணம் டவுன் தனிப்பிரிவுக்கும், அரக்கோணம் தாலுகா ஏட்டு மகேஷ் அரக்கோணம் தாலுகா தனிப்பிரிவு ஏட்டாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story