குன்னூரில் வெள்ள அபாய பகுதிகளில் வசிப்பவர்கள் வீடுகளை காலி செய்ய ஒரு வாரம் அவகாசம்
குன்னூரில் வெள்ள அபாய பகுதிகளில் வசிப்பவர்கள் வீடுகளை காலி செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சப்-கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஊட்டி,
குன்னூரில் மழை காலங்களில் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வருவாய் துறையினர் ஆய்வு செய்து வெள்ளம் அபாயம் ஏற்படக்கூடும் 97 வீடுகளை காலி செய்ய உத்தரவிட்டனர்.
குன்னூர் அருகே எம்.ஜி.ஆர். நகர், சித்தி விநாயகர் கோவில் தெரு, சுறா குப்பம் போன்ற பகுதிகளில் நீரோடைகள் அருகே வீடுகள் உள்ளதால் மழை காலங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டு குடியிருப்புகள் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
அங்கு வசிப்பவர்களுக்கு மாற்றிடம் கேத்தி அருகே பிரகாசபுரத்தில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டது. அங்கு சென்று வசிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஷ்வரி தலைமையில் வருவாய் துறையினர், போலீசார் மேற்கண்ட பகுதிகளுக்கு சென்று வெள்ள அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக வீடுகளை காலி செய்ய அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் காலி செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story