மாவட்டத்தில் இதுவரை 100 பேர் குண்டர் சட்டத்தில் கைது


மாவட்டத்தில் இதுவரை 100 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 27 July 2021 10:35 PM IST (Updated: 27 July 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 100 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 100 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

குண்டர் சட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல், போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 100 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

100 பேர் கைது

கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 74 பேரும், போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேரும், கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 8 பேரும், மணல் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 3 பேரும், விபசார வழக்கில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் சைபர் கிரைம் குற்றவாளி ஒருவர் ஆக மொத்தம் 100 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Next Story