பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 27 July 2021 10:43 PM IST (Updated: 27 July 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினத்தில் உள்ள பல மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த மின்கம்பங்களை மாற்றுவதற்கு மின் வாரியத்தின் சார்பில் குலசேகரன்பட்டினம் பெருமாள் கோவில் அருகே புதிய மின் கம்பங்கள் கொண்டு வரப்பட்டது. சில நாட்களாக அந்த பகுதியில் மின்கம்பங்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஆனால், பழைய மின்கம்பங்களை மாற்றிவிட்டு, இந்த கம்பங்களை நடும் பணி தாமதமாகி வந்தது.
இந்த நிலையில், குலசேகரன்பட்டினம் பகுதியில் புதிய மின்கம்பங்களை மின்வாரிய ஊழியர்கள் வேறு ஊருக்கு கொண்டு செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஊராட்சி உறுப்பினர் ராமலிங்கம் தலைமையில் மின்கம்பங்களை எடுத்து செல்லவிடாமல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 
இதை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் அந்த மின்கம்பங்களை வேறு பகுதிக்கு கொண்டு செல்லாமல் திரும்பி ெசன்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story