மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் 5½ பவுன் நகை பறிப்பு + "||" + 50 pound jewelery flush with retired head teacher

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் 5½ பவுன் நகை பறிப்பு

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் 5½ பவுன் நகை பறிப்பு
கோவையில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் 5½ பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
சரவணம்பட்டி,

கோவை கோவில்பாளையம் டேங்க் வீதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மனைவி கண்ணம்மாள் (வயது77). ஓய்வு பெற்ற தலைமையாசிரியை. இவர் நேற்றுகாலை வீட்டில் இருந்த போது முகவரி கேட்பது போல் வாலிபர் ஒருவர் வந்தார். 

அவர், திடீரென்று கண்ணம்மாள் கழுத்தில் இருந்த 5½  பவுன் தங்கநகை பறித்து விட்டு தப்பி சென்று விட்டார்.இது குறித்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.