தூத்துக்குடியில் கறுப்பு கொடி கட்டியதால் பரபரப்பு


தூத்துக்குடியில் கறுப்பு கொடி கட்டியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 July 2021 10:45 PM IST (Updated: 27 July 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கறுப்பு கொடி கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மிகவும் பிற்பட்டோர் இடஓதுக்கீட்டில் பண்ணையார் சமுதாயத்தை 20 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதத்துக்கு தள்ளி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்டித்தும், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பண்ணையார் சமுதாய மக்கள் தூத்துக்குடி லோகியாநகர், சுடலை காலனி, சிவந்தாகுளம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் கறுப்பு கொடிகள் கட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கட்டப்பட்டிருந்த கறுப்பு கொடிகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story