மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்டி.ஐ.ஜி. உத்தரவு + "||" + transfer

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்டி.ஐ.ஜி. உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்டி.ஐ.ஜி. உத்தரவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி:

இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் 
கிருஷ்ணகிரி மாவட்ட குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சுமித்ரா, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டார். கிருஷ்ணகிரி நக்சலைட்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கவேல், ஓசூர் அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், பர்கூர் இன்ஸ்பெக்டர் முரளி, காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டார்.
போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், பாகலூர் இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டனர். ஊத்தங்கரை மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மாவதி மகராஜகடை இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகரில் இருந்து சேலம் சரகத்திற்கு இடமாறுதலாகி வந்த இன்ஸ்பெக்டர் பழனியப்பன், கிருஷ்ணகிரி மாவட்ட குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பர்கூர், குருபரப்பள்ளி 
சேலம் மாவட்டம் கருமந்துறை இன்ஸ்பெக்டர் கமலேசன், ஊத்தங்கரை மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டராகவும், சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பிரபாவதி போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேட்டூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சவிதா, பர்கூர் இன்ஸ்பெக்டராகவும், ஓமலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் கிருஷ்ணகிரி நக்சலைட்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், சேலம் ஏற்காடு இன்ஸ்பெக்டர் சசிகலா, குருபரப்பள்ளி சர்க்கிள் இன்ஸ்பெக்டராகவும்  நியமிக்கப்பட்டனர்.
ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி, சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டிக்கும், கிருஷ்ணகிரி மகாராஜகடை இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் சேலம் ஏத்தாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டனர். ஏத்தாப்பூர் இன்ஸ்பெக்டர் குமரன், அஞ்செட்டி இன்ஸ்பெக்டராகவும், கிருஷ்ணகிரி குருபரப்பள்ளி இன்ஸ்பெக்டர் ரஜினி, ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
காவேரிப்பட்டணம், சிங்காரப்பேட்டை 
திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர் கபிலன் கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டராகவும், சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், நாமக்கல் மாவட்டம் வேகவுண்டம்பட்டி இன்ஸ்பெக்டராகவும், கிருஷ்ணகிரி மது விலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், திருச்செங்கோடு டவுன் இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் நாமக்கல் புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டராகவும், ராசிபுரம் இன்ஸ்பெக்டர் செல்வராஜூ, சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், கல்லாவி இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன், திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் அமுதா, கிருஷ்ணகிரி பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், பென்னாகரம் இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் உடனே பணியில் சேர உத்தரவு
விருதுநகர் மாவட்டத்தில் இடமாறுதல் செய்யப்பட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் உடனே பணியில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
2. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இடமாற்றம்
ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3. மதுரை மாநகரில் 90 போலீசார் இடமாற்றம்
மதுரை மாநகரில் 90 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
4. 14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
5. தாசில்தார்கள் இடமாற்றம்
சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் தாசில்தார்களை வேறு இடங்களுக்கு மாறுதல் செய்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.