மாவட்ட செய்திகள்

கிணத்துக்கடவு அருகே மன்றாம்பாளையத்தில் அரசுக்கு சொந்தமான நிலம் மீட்பு + "||" + At Manrampalayam near Kinathukadavu State owned land recovery

கிணத்துக்கடவு அருகே மன்றாம்பாளையத்தில் அரசுக்கு சொந்தமான நிலம் மீட்பு

கிணத்துக்கடவு அருகே மன்றாம்பாளையத்தில் அரசுக்கு சொந்தமான நிலம் மீட்பு
கிணத்துக்கடவு அருகே மன்றாம்பாளையத்தில் அரசுக்கு சொந்தமான நிலம் மீட்பு
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் மன்றாம்பாளையத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்து இருந்தார். 

இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று தாசில்தார் சசிரேகாவிடம் மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்த நபருக்கு, அதை அகற்ற நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. ஆனால் அந்த நபர் நிலத்தை காலிசெய்யவில்லை. 

இதைத்தொடர்ந்து தாசில்தார் சசிரேகா தலைமையில் வடசித்தூர் வருவாய் ஆய்வாளர் ராமலட்சுமி, நில அளவர் சரவணகுமார், கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அங்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த நபர் ஆக்கிரமித்து இருந்த 1 சென்ட் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். 


தொடர்புடைய செய்திகள்

1. ரூ.10 கோடி கோவில் நிலம் மீட்பு- அதிகாரிகள் நடவடிக்கை
கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான கோவில் நிலம் நேற்று மீட்கப்பட்டது.