தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் மீது வழக்கு


தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் மீது வழக்கு
x

தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தேவகோட்டை
தேவகோட்டை அருகே உள்ள சண்முகநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெத்தபெருமாள்(வயது 60). தொழில் அதிபர். இவரது தந்தை சேவுகன். இவருடன் உடன்பிறந்த சகோதரர்கள் 4 பேர். இவர்களுக்கு சொந்தமான பொது சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்கள் பிரிவினை ஆகாமல் இருந்தது. இந்த சொத்துக்களை போலி ஆவணங்கள் தயாரித்து பெத்தபெருமாள் உறவினரான வீரப்பன் என்பவர் சண்முகநாதபுரத்தை சேர்ந்த காளிமுத்து என்பவருக்கு விற்றதாக கூறப்படுகிறது. இதற்கு தேவகோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி செயலாளர் ராமநாதனும் உடந்தையாக இருந்ததாராம். இதுகுறித்து ஆறாவயல் போலீஸ் நிலையத்தில் பெத்த பெருமாள் புகார் செய்தார். சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில் வீரப்பன், காளிமுத்து, ராமநாதன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story