மாவட்ட செய்திகள்

தேர்வில் 314 பேர் தேர்ச்சி + "||" + exam

தேர்வில் 314 பேர் தேர்ச்சி

தேர்வில் 314 பேர் தேர்ச்சி
காவலர் உடல் தகுதி தேர்வில் 314 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் ஒருங்கிணைந்த 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித் தேர்வு நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான நேற்று நடைபெற்ற தேர்வில் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்ட 501 நபர்களில் 103 நபர்கள் பங்கேற்கவில்லை. பங்கேற்ற 398 நபர்களில் உயரம், மார்பளவு உள்ளிட்ட தேர்வில் 65 நபர்களும், 1,500 மீட்டர் ஓட்டத்தில் 19 நபர்கள் என மொத்தம் 84 நபர்கள் தகுதி பெறவில்லை. எஞ்சியுள்ள 314 நபர்கள் அடுத்தகட்ட உடல் திறன் தேர்விற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தெரிவித்துள்ளார்.