மாவட்ட செய்திகள்

அரூர் அருகே கிராமமக்கள் சாலை மறியல் + "||" + road block

அரூர் அருகே கிராமமக்கள் சாலை மறியல்

அரூர் அருகே கிராமமக்கள் சாலை மறியல்
அரூர் அருகே சாலை வசதி செய்து தரக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரூர்:

சாலை மறியல்
அரூர் அருகே உள்ள கோணம்பட்டி கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இந்த கிராமத்திற்கு புறாக்கல் உட்டையில் இருந்து செல்லும் 1 கி.மீ. சாலையில், கடந்த, 2005-ம் ஆண்டு பாதி தூரத்திற்கு தார்சாலை அமைக்கப்பட்டது. மீதமுள்ள தூரத்திற்கு தார்சாலை அமைக்கப்படவில்லை. இந்த நிலையில், சிலர் தங்கள் பட்டா நிலத்தில் சாலை உள்ளதாகவும், அதனால், வாகனங்களில் யாரும் வரக்கூடாது என கூறியதாக கூறப்படுகிறது. 
இது குறித்து கிராமமக்கள் தாசில்தார், கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவு ஆகியவற்றுக்கு கோரிக்கை மனு அனுப்பினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று சாலை வசதி செய்து தர கோரி அரூர்-தீர்த்தமலை சாலையில், கோணம்பட்டி பஸ் நிறுத்தத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 
பேச்சுவார்த்தை
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரூர் தாசில்தார் கனிமொழி, போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் விரைந்து வந்து கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தார்சாலை அமைத்து தர உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டிரைவர்-கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்
அரசு டவுன் பஸ்சில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த வழக்கில் டிரைவர்-கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு கலெக்டர் அலுவலகம் முன்பு கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல்
கட்டிட வசதி செய்து தரக்கோரி கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
3. காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குறைவான கூலி வழங்குவதாக கூறி தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குறைவான கூலி வழங்குவதாக கூறி தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. வனக்கோவிலுக்கு செல்ல தடை விதித்ததால் அரசு பஸ்சை சிறைபிடித்து மலைகிராம மக்கள் சாலை மறியல்
வனக்கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் அரசு பஸ்சை சிறைபிடித்து மலைகிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.