மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரியாபட்டி,
திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் குண்டாற்றுப் படுகையில் அனுமதியின்றி ஆற்றுமணல் அள்ளப்பட்டு வருவதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சுழி தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையிலான வருவாய்த்துறையினர் பாறைக்குளம், கொட்டம், பூமாலைபட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளை கண்டதும் 3 மாட்டு வண்டிகளில் வந்தவர்கள் வண்டியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அந்த 3 மாட்டு வண்டிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து திருச்சுழி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story