மாவட்ட செய்திகள்

லாலாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் 2 பேர் பலி + "||" + 2 killed in crash

லாலாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் 2 பேர் பலி

லாலாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் 2 பேர் பலி
லாலாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் 2 பேர் பலியாகினர்
லாலாபேட்டை
நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 21). இவர் திருப்பூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்த அவர் நேற்று முன்தினம் திருப்பூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாலாபேட்டை திம்மாச்சிபுரம் பெருமாள் கோவில் அருகே அன்று இரவு 8 மணியளவில் அவர் வந்தபோது குளித்தலையில் இருந்து அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மனைவி தேவிகாவுடன் (28) சென்று கொண்டிருந்த மாயனூரை சேர்ந்த மீன் வியாபாரி மோகன் (38) ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும், அரவிந்த் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இந்த சாலை விபத்தில் 3 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர்களில் சிகிச்சை பலனின்றி அரவிந்த், மோகன் ஆகிய இருவரும் உயிர் இழந்தனர். தேவிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. விபத்தில் 2 பேர் பலி
பல்லடத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.